Sponsored
Sponsored
Free Edition
Verified Content
பனுவல் போற்றுதும் [Panuval Pottruthum]
Overview
இத்தொகுப்பின் கட்டுரைகளை எழுத ஊக்குவித்த மூலவர் இருவர். ஒருவர் ‘சொல்வனம்’ சேதுபதி அருணாசலம். மற்றவர் ‘உடுக்கை இழந்தவன் கைபோல் உதவும்’ எனது நெருக்கமான நண்பர் வ.ஸ்ரீநிவாஸன். சொல்வனம் எனும் இணையதள திங்களிருமுறை இதழ் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே, என்னை அதில் எழுதக் கேட்டுக்கொண்டே இருந்தனர். என் இயல்பின் படி தாமதித்துக் கொண்டே இருந்தேன். அப்போது சிக்கி முக்கி. காம் இணையதள இதழில் எனது கதையொன்று வெளியானது. அதைக் கவனித்துவிட்டு, சேதுபதி சொன்னதாக வ.ஸ்ரீ. என்னிடம் விளையாட்டாகச் சொன்னார். ‘நாம முக்கி சிக்கிக் கேட்டாலும் எழுத மாட்டேங்கிறார்’ என்று. உரிமை கலந்த சொல்லென்றாலும் சற்று மனத்தாங்கலாக இருந்தது. அன்று தீர்மானித்ததுதான் ‘பனுவல் போற்றுதும்’ என்றொரு கட்டுரைத் தொடர் எழுதுவது என்று. அதுவே இந்நூலுக்கும் தலைப்பு ஆகிறது.
பனுவல் எனில் புத்தகம் என்பது பொருள். பாயிரம் இன்றேல் பனுவல் அன்று என்பது தொன் தமிழ் வழக்கு. பாயிரம் என்றால் சாற்று கவி. முன்னுரை, அறிமுகம், நூன்முகம் என்பவை போல. பனுவல் எனும் சொல் பழைய பஞ்சாங்கம் என்றும் பிரதி என்பதே பின்நவீனத்துவச் சொல்லாடல் என்றும் நீங்கள் கருதக்கூடும். எமக்கதில் வழக்கில்லை.
சிலப்பதிகாரத்தில், புகார்க் காண்டத்தில், மங்கல வாழ்த்துப் பாடலில், இளங்கோவடிகள் ஓதுகிறார். திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றதும், ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என. அந்தப் பாணியில், புத்தகங்களைப் போற்றுவோம் எனும் குறிக்கோளுடன் ‘பனுவல் போற்றுதும்’ என்று தொடருக்குத் தலைப்பு வைத்தேன். ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றொரு பழஞ்சொல் உண்டு. கோயில் என்றால் இந்துக் கோயில் என்று மட்டுமே பொருள்கொளல் வேண்டா. புத்தகங்கள் இல்லா வீட்டில் நீர் பருக வேண்டா என்று எனக்கு சொல்லத் தோன்றுகிறது.
‘பனுவல் போற்றுதும்’ தொடர் அதற்காகத் தொடங்கவில்லை. தமிழில் தகுதியான எத்தனையோ நூல்கள் வெளியாகி, வாசிப்புக் கவனம் பெறாமற் போய்விடுகின்றன. பல்கலைக்கழக வளாகங்கள் பலவும் தாம் வெளியிடும் பல முக்கியமான ஆய்வு நூற்களைக் கோவணத்தினுள் பதுக்கிக் கொள்கின்றன. எனவே சேதுவுக்கு மண்சுமந்த அணிற்பிள்ளை போல, என்னாலான சிறு முயற்சி இது. என்னை வசீகரித்த சில புத்தகங்களை பனுவல் போற்றுதும் எனும் தலைப்பில் சொல்வனத்தில் எழுதத் துணிந்தேன். இருபத்தைந்து கட்டுரைகள் எழுதுவதாய் வாக்கும் தந்தேன். துன்பம் என்னவெனில், இணைய தள இதழுக்கு கையினால் எழுதி அனுப்பும் எனது இயலாமை. 2010 ஜூனில் தொடங்கப்பட்ட இந்தப் பகுதிக்கு இதுவரை என்னால் பத்துக் கட்டுரைகளே எழுத முடிந்தது. சாகித்ய அகாதமி விருது பெற்றமைக்கான பாராட்டுக் கூட்டங்களினாலும் மகள் திருமண வேலைகளினாலும் இந்த ஓராண்டாய் என்னால் முழு முனைப்புடன் செயல்பட இயலவில்லை. என்றாலும் என்ன, யானை படுத்தாலும் குதிரை உயரம் இருக்கும். படிக்கப் படிக்கத் தெரிகிறது. இன்னும் ஒன்றுமே நான் படித்திருக்கவில்லை என்பது. அவ்வையே சொன்னாள், ‘கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகு அளவு’ என்று. மீதி வாழ்நாளில் இன்னும் எத்தனை புத்தகங்களை வாசித்து விட இயலும்? அதற்காக ‘எட்டுக் கருப்பட்டியை ஒண்ணா முழுங்கீரவும்’ முடியாது.
இந்நூலின் பல கட்டுரைகள் எனது வழக்கமான பாணியிலானவை அல்ல. எனது ஆய்வு முடிவுகளும் அல்ல. என்னை வசீகரித்த நூல்களை வாசகருக்கு அறிமுகம் செய்கிறேன். அவ்வளவே! இவற்றுள் தகவற் பிழைகள் இருக்கலாம், பொருட்குற்றம் இருக்கலாம். எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்ல முயல்கிறேன். மேலுள்ளவை நீங்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளலாம். இவை என் பண்டித்தியம் புலப்படுத்த அல்ல. நான் பண்டிதனும் அல்ல. மாணிக்கவாசகன் சொன்ன, ‘கற்பனவும் இனி அமையும்’ எனும் தொடருக்கு, இதுவரை கற்றது போதும் என்று பொருள் கொள்வதற்கு மாறாக, கற்பன இனிமேல் நடக்கும் என்று பொருள் கொள்கிறேன்.
எமது இளைய படைப்புலக, வாசக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தேடுங்கள், கிடைக்கும்.
மிக்க அன்புடன்
நாஞ்சின் நாடன்

36,114 currently reading
152,889 want to read
Sponsored
Sponsored
Book details & editions
| ISBN | 54456739 |
| Publisher | Pustaka Digital Media |
| Publication date | October 2026 |
| Language | TAM |
| Pages | 297 pages |
Sponsored
Sponsored
Ratings & Reviews
5 ★
58%
4 ★
28%
3 ★
10%
2 ★
3%
1 ★
1%
4.33
BlueReads Choice
Sponsored
Write a Review
Community Reviews
Sort by: